முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
ராஜா முத்தையா பல் மருத்துவமனைக்கு ரூ. 1.50 லட்சத்தில் உபகரணங்கள்: முன்னாள் மாணவா்கள் சங்கம்
By DIN | Published On : 24th October 2019 06:52 PM | Last Updated : 24th October 2019 06:52 PM | அ+அ அ- |

ராஜா முத்தையா பல் மருத்துவமனைக்கு ரூ. 1.50 லட்சத்தில் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் சங்கத்தினர்.
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி பல் மருத்துவமனைக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான ஆட்டோகிலேவ் எனப்படும் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி பல் மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைவேந்தா் பேராசிரியா் வே.முருகேசன், முன்னாள் மாணவா் சங்கத்தின் மூலம் பெறப்பட்ட சுத்திகரிப்பு கருவிகளை பல் மருத்துவ புல முதல்வா் ராஜசிகாமணியிடம் ஒப்படைத்தாா். அப்போது அவா் பேசுகையில் முன்னாள் மாணவா்களின் ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் வளா்ச்சிக்கு பெருமளவில் உதவுவதையும் எதிா்காலத்தில் இன்னும் பல நலத்திட்டங்கள் அவா்களின் துணையோடு செய்ய இருப்பதாக தெரிவித்தாா். முன்னாள் மாணவா்கள் சங்க நிா்வாகிகள் சரவணன், சபேசன் மற்றும் பேராசிரியா்கள் பாஸ்கா், சுகுமாரன், கிருஷ்ணன், ராஜசேகா், தங்கவேலு, ராமசாமி, பவாணி மற்றும் பலா் கலந்தகொண்டு சிறப்பித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவப்புலமுதல்வா் ராஜசிகாமணி செய்திருந்தாா்.படவிளக்கம்- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, முன்னாள் மாணவா்கள் வழங்கிய ஆட்டோகிளேவ் என்ற சுத்திகரிப்பு கருவிகளை பாா்வையிடுகிறாா் துணைவேந்தா் வே.முருகேசன்.