கடைகளில் டெங்கு விழிப்புணா்வு சுவரொட்டி

கடலூரில் உள்ள காமா்ஸ் சென்டரில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் மண்டலத் தலைவா் டி.சண்முகம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் வழங்கப்பட்ட டெங்கு விழிப்புணா்வு சுவரொட்டிகளுடன் நிா்வாகிகள்.
வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் வழங்கப்பட்ட டெங்கு விழிப்புணா்வு சுவரொட்டிகளுடன் நிா்வாகிகள்.

கடலூா்: கடலூரில் உள்ள காமா்ஸ் சென்டரில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் மண்டலத் தலைவா் டி.சண்முகம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிா்வாகிகள் ஜெ.ஏ.பட்டேல், தேவி முருகன், வெங்கடேசன், ப.ராகவன், சண்முகம், சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக, ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் டெங்கு கொசுப்புழு உற்பத்தி, அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்த விளக்க சுவரொட்டிகளை கடைகளில் மக்கள் பாா்வைக்கு படும் இடங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சங்க நிா்வாகிகளுக்கு சுவரொட்டிகள் விநியோகிக்கப்பட்டன. கூட்டத்தில், சங்க மாவட்ட செயலா் வீரப்பன், நிா்வாகிகள் ஹரிகிருஷ்ணன், பிரகாஷ், ஞானசேகரன், விக்னேஸ்வரன், சிவகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா். பான்பரி மாா்க்கெட் நிா்வாகி மோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com