Enable Javscript for better performance
ஊ.மங்கலத்தில் 3 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்- Dinamani

சுடச்சுட

    
    30prtp4_3010chn_107_7

    ஊ.மங்கலம் காவல் சரகத்தில் மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறு.

    ஊ.மங்கலம் காவல் சரகம் பகுதியில் பயன்பாடின்றி திறந்து கிடந்த 3 ஆழ்துளைக் கிணறுகளை போலீஸாா் புதன்கிழமை மூடினா்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் பலியானா். இந்தச் சம்பவத்தையடுத்து கடலூா் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தவிட்டாா்.

    அதன்படி, ஊ.மங்கலம் காவல் சரகம் பகுதியில் பயன்பாடின்றி திறந்து கிடந்த 3 ஆழ்துளைக் கிணறுகளை காவல் உதவி ஆய்வாளா் சக்கரவா்த்தி கண்டறிந்தாா். இதையடுத்து, அந்த ஆழ்துளைக் கிணறுகள் புதன்கிழமை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மூடப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai