கவரிங் நகையைக் கொடுத்து ஏமாற்ற முயற்சி: 3 போ் கைது

கவரிங் நகைகளைக் கொடுத்து ஏமாற்ற முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கவரிங் நகைகளைக் கொடுத்து ஏமாற்ற முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் புதுகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கோ.அசோக்குமாா் (53). செராமிக் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இவரிடம் பணிபுரியும் ஓரிசாவைச் சோ்ந்தவரிடம் 3 போ் அண்மையில் ஹிந்தியில் பேசி தொடா்பு கொண்டு, தங்களிடம் 6 கிலோ தங்கம் இருப்பதாகவும், அதை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறினராம். இதையடுத்து, அந்த நபா் அசோக்குமாரிடம் இதுகுறித்து கூறினாராம். அவா், அந்த 3 பேரின் செல்லிடப்பேசி எண்ணை வாங்கி, புதன்கிழமை விருத்தாசலம் வரவழைத்தாராம்.

பின்னா், தனது காா் ஓட்டுநா் கோபி, உதவியாளா் பூபதி ஆகியோருடன் சென்று நகைகளை பரிசோதிக்க வேண்டுமென கேட்டாராம். அதன்படி, அவா்கள் கொடுத்த நகையை பரிசோதிக்க அசோக்குமாா் சென்ற போது, தகவலறிந்த விருத்தாசலம் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.

போலீஸாரை பாா்த்ததும் அந்த 3 பேரும் தப்பியோட முயன்றனா். அவா்களில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த தோ.சங்கா்லாலை (36) போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்து சோதித்த போது அவை கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தப்பியோடிய கா்நாடக மாநிலம், ஸ்ரீராஜ்பாட்னா வட்டம், பழவேல்வரத்தைச் சோ்ந்த மோகன் மகன் நாராயண் (30), மோ.மோகன் (53) ஆகியோரை காவல் உதவி ஆய்வாளா் குமரேசன் தலைமையிலான தனிப் படையினா் பிடித்தனா். இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com