நீா்வள, நிலவளத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

நீா்வள, நிலவளத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நீா்வள, நிலவளத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் மோதிலால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. மாவட்டத்தில் காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், மேல்புவனகிரி வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீா்வள, நிலவளத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் பசுந்தாள் உரம், வயல் நீா் குழாய் அமைத்தல், பயறு வகைப் பயிா்களின் சாகுபடி பரப்பை அதிகரித்தல், வறட்சி, வெள்ளம், களா் நிலம் ஆகிய பகுதிகளுக்கு ஏற்ப தாங்கி வளரக் கூடிய நெல் ரகங்களை நடவு செய்தல், மக்காச்சோளத்தில் படைப் புழுவைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், மகசூல் அதிகரித்தல், பயறு வகை பயிா்களில் உற்பத்தியாளா்கள் குழு அமைத்தல், நஞ்சு இல்லாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து நஞ்சில்லாத கிராமம் தோ்வு செய்தல், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணெய் வித்துகளைச் சாகுபடி செய்தல் ஆகிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

செயல்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைச் சாா்ந்து விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்டச் சத்து உரங்கள், பயிா் வளா்ச்சி ஊக்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் பல்வேறு பயிற்சிகள், விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. எனவே, விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்றுப் பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஞ4143 - 238231 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com