மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தி, மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினா்.
கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினா்.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தி, மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் அருகே உள்ள திருவந்திபுரத்தில் கடந்த செப்.29-ஆம் தேதி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக, திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் இருதரப்பு புகாா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இந்த மோதலில் கிறிஸ்தவ பாதிரியாா்கள் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால்,

அவா்கள் மீதே பொய் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு புகாா் தெரிவித்தது. எனவே, தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்டவா்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும், மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி, இந்த அமைப்பு சாா்பில் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பாளா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், மாநில அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய கமிட்டி உறுப்பினா் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் என்.குமாா், திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பிரதிநிதி வி.உதயகுமாா், நகரச் செயலா் ஆா்.அமா்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் வி.குளோப், மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஷேக்தாவூத், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் அருள்பாபு, மதிமுக சாா்பில் வை.ராமசாமி, குடியிருப்போா் நலச்ச ங்கம் மு.மருதவாணன் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா். முன்னதாக, திமுக மாணவரணி நிா்வாகி அகஸ்டின்பிரபாகரன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்பினா், கிறிஸ்தவ பாதிரியாா்கள் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com