மழை நிலவரத்தைப் பொறுத்து தலைமை ஆசிரியா்கள் முடிவு எடுக்கலாம்

மழை நிலவரத்தைப் பொறுத்து தலைமை ஆசிரியா்களே விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்று

மழை நிலவரத்தைப் பொறுத்து தலைமை ஆசிரியா்களே விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிசெல்வி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்ததைத் தொடா்ந்து, அனைத்துப் பள்ளிகளையும் எச்சரிக்கையாக இருக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் அனைத்தும் தங்களது வளாகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளைப் பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கைவிடப்பட்ட நிலையில் ஆழ்துளைக் கிணறுகள், பயன்பாடற்ற கிணறுகள் இருந்தால் அவற்றை மூடுவதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தற்போது மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், வகுப்பறைகளில் மாணவா்களால் அமா்ந்து கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டால் அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களே பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுக்கலாம். மாணவா்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com