வெளிநாட்டில் வசிக்கும் கணவரை மீட்கக் கோரி மனைவி மனு

வெளிநாட்டில் வசிக்கும் கணவரை மீட்கக் கோரி அவரது மனைவி மாவட்ட  ஆட்சியரகத்தில்  மனு  அளித்தார்.

வெளிநாட்டில் வசிக்கும் கணவரை மீட்கக் கோரி அவரது மனைவி மாவட்ட  ஆட்சியரகத்தில்  மனு  அளித்தார்.
 பண்ருட்டி வட்டம், ஆண்டிப்பாளையம் புது காலனியை சேர்ந்த செல்வம் மகன் தங்கமணி (34). இவரது மனைவி மகேஸ்வரி (25 ). இவர் சனிக்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வனிடம் அளித்த மனு: 
எனது கணவர் தங்கமணி கடந்த பிப். 27-ஆம் தேதி சவூதி அரேபியா நாட்டின் தமாம் என்ற இடத்துக்கு ஓட்டுநர் வேலைக்காக சென்றார். அவருக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த மாதம் எங்களுடன் அழுது கொண்டு பேசினார். அப்போது, கபில் என்பவர் தன்னை சரமாரியாக தாக்கியதாகக் கூறினார். பாதுகாப்பு கருதி, எனது கணவர் கடந்த 3 நாள்களுக்கு முன்பு இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். 
அவரிடம் இந்திய தூதரகமும் விசாரணை நடத்தியதோடு விரைவில் ஊருக்கு அனுப்புவதாக தெரிவித்ததாம். இந்த நிலையில், தங்கமணியை இந்திய தூதரகத்திலிருந்து வேறு ஆள்கள் மூலமாக வெளியே அழைத்துச்சென்று மற்றொரு இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு அவருக்கு உணவு வழங்காமல் அடித்து சித்ரவதை செய்து வருவதாகத் தெரிகிறது. 
தங்கமணிக்காக அந்த ஊருக்கான  அடையாள அட்டை பெறுவதற்கு 
ரூ.2 லட்சம் வரை செலவு ஆனதாகவும் 
அந்தத் தொகையை கட்டினால்தான் சொந்த ஊருக்கு அனுப்ப முடியும் என்று கபில் தெரிவித்ததாகவும் எனது கணவர் அச்சத்துடன் தெரிவித்தார். 
எனவே,  அவரை காப்பாற்ற இந்திய 
தூதரகத்திடம்  மாவட்ட ஆட்சியர் 
வலியுறுத்த வேண்டும் என்று அந்த 
மனுவில் கோரியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com