கால்நடை செயற்கை கருவூட்டல் திட்ட முகாம்

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், தேசிய கால்நடை நோய்க் கட்டுப்பாடு மற்றும் செயற்கை

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், தேசிய கால்நடை நோய்க் கட்டுப்பாடு மற்றும் செயற்கை முறை கருவூட்டல் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
செயற்கை முறை கருவூட்டல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் புதன்கிழமை காலை தொடக்கிவைத்தார். 
இந்த நிகழ்ச்சி விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு காணொலிக் காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் நடைபெற்று, தடுப்பூசி போடப்பட்டது. 
தொடர்ந்து, புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில்  செயற்கை கருவூட்டலுக்கான ஊசியும், கோமாரி நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசியும் போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, குடல்புழு நீக்க மருந்துகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து தாது உப்புக் கலவையும் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.கண்ணன் தொடக்கிவைத்து, விவசாயிகளுக்கு தாது உப்புக் கலவை மற்றும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். 
கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் குபேந்திரன், துணை இயக்குநர் லதா, விருத்தாசலம் கால்நடை துறை உதவி இயக்குநர் ராஜேஷ்குமார், உதவி கால்நடை மருத்துவர்களான வேல்முருகன், சேட்டு, சுந்தரம், 
புவனேஸ்வரி ஆகியோர் செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கோமாரி நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டனர். 
முகாமுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் க.நடராஜன், ம.பாலரூபிணி ஆகியோர் செய்திருந்தனர். 
முகாமுக்கு 192 கால்நடைகள் கொண்டுவரப்பட்டன. 93 விவசாயிகள் பங்கேற்றனர். தஞ்சை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள் 
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com