குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கான இடம் ஆய்வு

பண்ருட்டி அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டப்படவுள்ள இடத்தை கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

பண்ருட்டி அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டப்படவுள்ள இடத்தை கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரத்துக்கு உள்பட்ட இருளங்குப்பத்தில் 58 சென்ட் களம் புறம்போக்கு நிலம் உள்ளது. 
இந்த நிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பயனாளிகளுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.13 கோடி செலவில் அடுக்குமாடிகளைக் கொண்ட 144 குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. 
இந்த இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பண்ருட்டி வட்டாட்சியர் எஸ்.கீதா, மண்டல துணை வட்டாட்சியர் மோகன், நில அளவர்கள் சக்திவேல், தேவகுமார், கிராம நிர்வாக அலுவலர் தனபதி ஆகியோர் இருந்தனர்.
முன்னதாக, பண்ருட்டி ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்ட இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com