வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நாளை வெளியீடு

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர்  வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளை பிரித்தல், வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவுக்கு மேல் உள்ளவை, பழுதடைந்த கட்டடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை வேறு கட்டடத்துக்கு மாற்றம் செய்தல் மற்றும் இதர காரணங்களுக்காக வாக்குச்சாவடி மையங்களை பகுப்பது, ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 1500 வரையில் வாக்களிக்க வைப்பது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிக் கட்டமாக வரும் 13-ஆம் தேதி வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட 
உள்ளது. 
மேற்படி வாக்குச்சாவடி மையங்கள் குறித்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வைக்கப்பட உள்ளது. இவ்வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கூற்று மற்றும் ஆட்சேபனைகளை வரும் 19-ஆம் தேதிக்குள் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். 
மேலும் பொதுமக்கள் வரைவு அறிக்கையை கடலூர் மாவட்ட அரசு வலைதளமான  w‌w‌w.​c‌u‌d‌d​a‌l‌o‌r‌e.‌n‌i​c.‌i‌n  என்ற தொடர்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆட்சியர்   தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com