சுடச்சுட

  

  ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் வரத்து அதிகரிப்பு

  By DIN  |   Published on : 13th September 2019 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு  நெல் வரத்து அதிகரித்து, வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1000 மூட்டைகள் நெல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
  விருத்தாசலத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. 
  இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
  இந்த நிலையில், வியாழக்கிழமை விற்பனைக்காக 1000 மூட்டைகள் நெல் கொண்டு வரப்பட்டிருந்தது. புதன்கிழமை விடுமுறை என்பதால் விற்பனை நடைபெறாத நிலையில், செவ்வாய்க்கிழமை 500 மூட்டைகளும், திங்கள்கிழமை 800 மூட்டைகளும், அதற்கு முந்தைய நாள்களில் சராசரியாக 500 மூட்டைகள் நெல் வரத்து இருந்தது.
  ஏஎஸ்டி-16 ரகம் 550 மூட்டைகளும், ஏடிடி-43 ரகம் 250 மூட்டைகளும், பிபிடி ரகம் 200 மூட்டைகளும் விற்பனைக்காக வந்திருந்தன.  இதில், பிபிடி ரகம் சராசரியாக மூட்டை ரூ.1,869க்கும், ஏஎஸ்டி-16 ரகம் ரூ.1,240க்கும், ஏடிடி-43 ரகம் ரூ.1,339க்கும் விற்பனையானது. மணிலா 15 மூட்டைகள் வந்திருந்த நிலையில், சராசரியாக ரூ.7,539க்கு விற்பனையானது. 7 மூட்டைகள் எள் வந்திருந்த நிலையில், உயர்ந்த விலையாக ரூ.9,192க்கும், குறைந்த விலையாக ரூ.6,499க்கும், சராசரியாக ரூ.7,812க்கும் விற்பனையானது. 
  தேங்காய் பருப்பு 55 மூட்டைகளும், உளுந்து 35 மூட்டைகளும், சோளம் 100 மூட்டைகளும், கம்பு 20 மூட்டைகளும் விற்பனைக்கு வந்திருந்தன.  தற்போது, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் தானியங்கள் வரத்து குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai