சுடச்சுட

  

  கடலூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் , அதில் பயணம் செய்த தம்பதி காயமடைந்தனர்.  
  நெல்லிக்குப்பத்தை அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாயம் (54). இவரது மனைவி பூங்கொடி (51). இருவரும் புதுச்சேரியிலிருந்து வியாழக்கிழமை காரில் மேல்பட்டாம்பாக்கம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். 
  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது நமச்சிவாயத்துக்கு செல்லிடப்பேசியில் அழைப்பு வந்தது. 
  இதற்காக செல்லிடபேசி எடுக்கமுயன்ற போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த வடிகால் வாய்க்காலுக்குள் பாய்ந்தது. சுமார் 4 அடி ஆழம் கொண்ட வாய்க்காலில் கார் அந்தரத்தில் தொங்கியது. 
  இதில், இருவரும் காயமடைந்தனர்.  அவ்வழியாகச் சென்றவர்கள் இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
  இதுகுறித்து, கடலூர் புதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai