சுடச்சுட

  

  சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு ஆவணி மாத மகாபிஷேகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.  
  ஸ்ரீ நடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். 
  ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
  மகாபிஷேகம்: ஆவணி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனக சபையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மகாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீநடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையிலிருந்து கனகசபைக்கு எழுந்தருளினர். 
  பின்னர் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர்  பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.  
  திரளான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டுகளித்து தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai