சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 
  இதில் அதிகபட்சமாக லால்பேட்டையில் 96 மி.மீ. மழை பதிவானது.  
  கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் மீண்டும் மழை இரண்டு நாள்களுக்கு முன்பு தொடங்கியது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக லால்பேட்டையில் 96 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம்: (மில்லி மீட்டரில்)...
  குறிஞ்சிப்பாடி 93, வேப்பூர் 85, காட்டுமயிலூர் 83, காட்டுமன்னார்கோவில் 72, மேமாத்தூர் 62, சிதம்பரம் 61, பெலாந்துறை 60.4, கடலூர் 58.7, பரங்கிப்பேட்டை 58, குறிஞ்சிப்பாடி 52, வானமாதேவி, ஆட்சியர் அலுவலகம் தலா 49, குடிதாங்கி 47.5, அண்ணாமலைநகர் 41, ஸ்ரீமுஷ்ணம் 38.3, வடக்குத்து 34, சேத்தியாத்தோப்பு 33, விருத்தாசலம் 28, குப்பநத்தம் 25.2, பண்ருட்டி 23, கொத்தவாச்சேரி 22, தொழுதூர் 19, லக்கூர் 18.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai