சுடச்சுட

  

  பண்ருட்டி வடகைலாசம் மேலப்பாளையம் பலிஜா நாயுடு சமுகத்துக்கு உள்பட்ட பஜனைமடம் என்ற பஜனைக் கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீ சஞ்சீவிராயர் ஸமேத ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில் பாலாலய பிரிதிஷ்டமை வியாழக்கிழமை நடைபெற்றது. 
  இந்நிகழ்வை முன்னிட்டு, புதன்கிழமை காலை 9 மணியளவில் ஸகஸ்ரநாம பாராயணம், கலச ஸ்தாபனம், திருப்பாவை சாற்றுமுறையும், மாலை 5 மணியளவில் பகவத் அனுஞ்ஞை, யஜமான சங்கல்பம், புண்யா வாசனம், வாஸ்து சாந்தி, யாக சாலை ஹோமம் நடைபெற்றது. 
  வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விஸ்வரூபம், கோ பூஜை, யாக சாலை மற்றும் விசேஷ ஹோமம், மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.  9 மணி முதல் 9.45 மணி வரை ஸ்ரீ ராமர் பரிவார பாலாலய ஸ்தாபனம் நடைபெற்றது.
  நிகழ்ச்சியில், பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், கோயில் அறங்காவலர் எம்.சேஷாசலம் உள்ளிட்ட திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai