வேணுகோபால சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

வெங்கடாம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபாலசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம்  வியாழக்கிழமை நடைபெற்றது.

வெங்கடாம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபாலசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம்  வியாழக்கிழமை நடைபெற்றது.
 பழைமையான இந்தக் கோயிலில் பெருமாள் நின்ற கோலத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் பள்ளிகொண்ட ராமராகவும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டநாதராகவும் காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலில் 2-ஆம் ஆண்டு பிம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, இரவு 7 மணியளவில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். 
விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. 
இரவு 7 மணியவில் அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். விழாவில், வருகிற 20-ஆம் தேதி காலை 8 மணியளவில் திருத்தேர் புறப்பாடும், 22-ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், சிவ பாஸ்கர ஸ்வாமிகள் மற்றும் வெங்கடாம்பேட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com