மாற்றுப் பாதையில் மண் அரிப்பு: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பண்ருட்டி அருகே சாலை சிறு பாலப் பணிக்காக  அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாற்றுப் பாதையில்
மாற்றுப் பாதையில் மண் அரிப்பு: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பண்ருட்டி அருகே சாலை சிறு பாலப் பணிக்காக  அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாற்றுப் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளதால், அவ்வழியாக வாகன ஓட்டிகளும்,  பயணிகளும் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
பண்ருட்டியில் இருந்து பணிக்கன்குப்பம் ஊராட்சி வழியாக மேலிருப்பு, நன்னிக்குப்பம், விசூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
இந்த வழித் தடத்தில் 40-க்கும்  மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல்வேறு தேவைகளுக்காக கிராம மக்களும், கல்வி நிலையங்களுக்குச் செல்ல மாணவ, மாணவிகளும், அலுவல் நிமித்தமாக அரசு, தனியார் ஊழியர்களும் பண்ருட்டி  வரவேண்டியுள்ளது.
 மேற்கண்ட சாலையில் பணிக்கன்குப்பம் அருகே ஓடை செல்கிறது. இந்த ஓடையில் ரூ.1.75 கோடியில் சிறு பாலம் கட்டும் பணி பொதுப்பணித் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. வாகனங்கள் செல்வதற்காக ஓடையில் சிமென்ட் குழாய்கள் பதித்து தற்காலிகமாக மாற்றுப்பாதை ஏற்படுத்தியுள்ளனர். இதன் வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.
அண்மையில் பெய்த மழையில், மழைநீர் ஓடை வழியாக பாய்ந்ததில் மாற்றுப் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வால் விபத்து நேரிடுமோ என்ற அச்ச உணர்வு பயணிகளுக்கு ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து மாற்றுப் பாதையை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com