அண்ணாமலைப் பல்கலை.யில் சர்வதேச கருத்தரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், "கணக்கீடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள்'

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், "கணக்கீடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள்'  என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பொறியியல் புல கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் இரண்டு நாள்கள் நடைபெறும்  இந்தக் கருத்தரங்கத் தொடக்க விழாவில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் பி.அருணா வரவேற்றார்.  
பல்கலைக்கழகப் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் கருத்தரங்கை தொடக்கிவைத்து பேரூரையாற்றினார். அப்போது அவர், நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆ.உ.-இநஉ ளஅழ்ற்ண்ச்ண்ஸ்ரீண்ஹப் ஐய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங் & ஙஹஸ்ரீட்ண்ய்ங் கங்ஹழ்ய்ண்ய்ஞ்ன மற்றும் ஆ.உ.-இநஉ ளஆண்ஞ் ஈஹற்ஹ அய்ஹப்ஹ்ற்ண்ஸ்ரீள்ன ஆகிய படிப்புகளின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.
பொறியியல் புல முதல்வர் கே.ரகுகாந்தன் தலைமை வகித்துப் பேசுகையில், கணினிப் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியையும், அதன் பயன்பாடுகளையும் எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மலேசிய மல்டிமீடியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சரவணன் முத்தையா கலந்து கொண்டு, கணினிப் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி, புதிய மென்பொருள்களின் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பெற்ற இயந்திரங்களை உருவாக்கும் முறைகள், அதன் தேவைகள் குறித்து விளக்கினார். கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. 
கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்,  ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். 
கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் பி.சுதாகர் கருத்தரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.  முனைவர் ஜி.பிரபாகரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com