கட்டடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் கட்டடத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் கட்டடத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர்டி.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். 
மாவட்டத் தலைவர் சி.வீரப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினார்.
தொமுச நிர்வாகி பி.சி.எத்திராஜ், ஐஎன்டியூசி மாவட்ட குழுத் தலைவர் இ.பலராமன் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பாலா ஆனந்தஜோதி, 
டி.குமார், ஆர்.அரிபாஸ்கரன், எம்.மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர் மத்திய சட்டத்தையும் நல வாரியங்களையும் முடக்கும் 
நடவடிக்கையைக் கைவிட வேண்டும். நல வாரியங்களில் ரூ.34  
ஆயிரம் கோடி இருப்பில் உள்ள தொகையை மற்ற பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வதை கைவிட வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ உரிமைகளை பறிக்கக் கூடாது. தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் 
சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர்கள் கே.வைத்தியலிங்கம், பி.பாஸ்கரன், பி.கலியபெருமாள், கே.பன்னீர்செல்வம், ஜி.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொதுச்செயலர் வி.குளோப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com