சர்க்கரை ஆலை சொத்துகள் விற்பனையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை: மாவட்ட ஆட்சியர்

சர்க்கரை ஆலை களின் சொத்துகள் விற்பனையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.


சர்க்கரை ஆலை களின் சொத்துகள் விற்பனையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பேசியதாவது: 
கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவ சாகுபடி சிறப்பாக இருக்குமென எதிர்பார்க்கிறோம். பருவமழை பெய்துள்ள நிலையில், காவிரி ஆற்றிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் கடை மடை பகுதிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சம்பா பருவத்துக்கான மானிய தொகையாக அரசு முதல்கட்டமாக  ரூ.2 கோடியை விடுவித்துள்ளது. உரங்கள் தேவையான அளவுக்கு இருப்பில் உள்ளன. குறிப்பாக யூரியா தட்டுப்பாடு இல்லை. 
விவசாயிகளுக்கு கரும்புக்கான பாக்கி வைத்துள்ள சர்க்கரை ஆலைகளின் சர்க்கரையை விற்பனை செய்துள்ளோம். அடுத்ததாக மொலாசஸ் விற்பனை செய்ய உள்ளோம். இதில், கிடைக்கும் பணம் விவசாயிகளுக்கு 80 சதவீதமும், ஆலை தொழிலாளர்களுக்கு 20 சதவீதமும் வழங்கப்படும். குறிப்பாக, ஆலைத் தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அவர்களுக்கு சம்பளமும், அவர்களது குடியிருப்புகளுக்கு ரூ.17 லட்சம் மின் கட்டணம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்க்கரை ஆலையின் 
சொத்துகளை கடனுக்காக வங்கிகள் முடக்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத்தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
படைப்புழுக்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.10.14 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.14 கோடி வரப்பெற்றுள்ள நிலையில் 38,806 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார் ஆட்சியர்.
முன்னதாக, திருஆரூரான், அம்பிகா சர்கரை ஆலைகள் விவசாயிகள் பெயரில் பெற்ற கடன்களை அந்த ஆலைகளின் பெயருக்கு மாற்ற வேண்டும். கம்பெனி சட்டத்தில் விவசாயிகளுக்கு பணம் கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து விவசாயிகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் 
ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com