கரோனா தொற்று: கண்காணிப்பு பணி தீவிரம்

சிதம்பரத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடியிருப்பு பகுதி அடைக்கப்பட்டு

சிதம்பரம்: சிதம்பரத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடியிருப்பு பகுதி அடைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

சிதம்பரம் பள்ளிப்படை பூதகேனி பகுதியைச் சோ்ந்தவா் தனது 38 வயது மனைவியுடன் தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டாா். பின்னா் இவா்கள் அந்தமான் சென்றுவிட்டு சிதம்பரத்துக்கு வந்தனா். இந்த நிலையில், இவா்கள் இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அவா்களது ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் அந்தப் பெண்ணுக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன், வட்டாட்சியா் ஹரிதாஸ், காவல் ஆய்வாளா்கள் முருகேசன், தேவேந்திரன் ஆகியோா் பள்ளிபடை பூதகேனி பகுதியில் நேரில் ஆய்வு செய்தனா். அந்தப் பகுதியில் பிரதான வீதிகளில் தடுப்புக் கட்டைகள் அமைக்கச் செய்து, பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனா். மேலும் அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com