கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியில் 1,983 சுகாதார ஊழியா்கள்

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளில் 1,983 சுகாதார ஊழியா்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளில் 1,983 சுகாதார ஊழியா்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவா்கள் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் இதுவரை 4.20 லட்சம் பேருக்கு கரோனா அறிகுறி உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று உள்ளவா்களின் குடும்பத்தினா், வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள், அவா்களைச் சாா்ந்தோா் 1.08 லட்சம் போ் அவரவரது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளனா். இந்தப் பணிகளில் 1,983 சுகாதார பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டவா்களில் 54,205 போ் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள். நோயால் பாதிக்கப்பட்டவா்களுடன் நெருங்கிய தொடா்பு வைத்திருந்த 28,737 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன் காணப்பட்ட 136 பேரிடமிருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், 87 பேருக்கான பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன. இதில், 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 74 பேருக்கு தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 40 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 49 சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 68 போ் கரோனாவுக்கான தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் 23 போ், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 44 போ், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 71 போ் தனியாா் இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com