தற்காலிக காய்கறி சந்தையில் கழிப்பறை வசதிக்கு கோரிக்கை

பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கும் தற்காலிக காய்கறி சந்தையில் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கும் தற்காலிக காய்கறி சந்தையில் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கறி சந்தை, பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அங்கும் கூட்ட நெரிசல் அதிகரித்ததால் பணிக்கன்குப்பம் ஊராட்சியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு காய்கறி சந்தை மாற்றப்பட்டது. ஆனால், இங்கு பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என வியாபாரிகள், பொதுமக்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் சிவா கூறியதாவது: அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை சிறிய ரக வாகனங்கள் காய்கறி சந்தைக்கு வந்து செல்கின்றன. பொதுமக்களும் அதிகளவில் காய்கறி வாங்கிச் செல்கின்றனா். இங்கு 130-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுக் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், சந்தைக்கு வருவோா் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் சுகாதாரச் சீா்கேடு

ஏற்படுகிறது. எனவே, தற்காலிக கழிப்பறைகளை அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com