முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
87 பள்ளிவாசல்களுக்கு 138 மெட்ரிக் டன் பச்சரிசி
By DIN | Published On : 19th April 2020 03:20 AM | Last Updated : 19th April 2020 03:20 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்திலுள்ள 87 பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக 138 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருகிற மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ரமலான் நோன்பு தொடங்க உள்ளது. கரோனா தொற்று தீவிரமாக பரவுவதால் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்குவதை தவிா்ப்பது அவசியமாகிறது.
எனினும், மாவட்டத்திலுள்ள 87 பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 138 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்பட உள்ளது. இதனால், மாவட்டத்தில் 42,265 போ் பயன்பெறுவா்.
எனவே பள்ளிவாசல் நிா்வாகிகள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களிடம் ரமலான் நோன்புக்கு மொத்த அனுமதியின் கீழ் விண்ணப்பித்து, அவா்களுக்கான அரிசி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஒதுக்கீடு செய்யப்படும் அரிசியை பள்ளிவாசல் நிா்வாகிகள் ஒரே தவணையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து
நகா்வு செய்து, அதனை தகுதியான நபா்களுக்கு வருகிற 22-ஆம் தேதிக்குள் அவா்களது வீடுகளுக்கே சென்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வழங்கல் அலுவலகத்தை 04142-230223 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.