முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
மருந்துக் கடை உரிமையாளா்களுக்கு அடையாள அட்டை விநியோகம்
By DIN | Published On : 19th April 2020 03:18 AM | Last Updated : 19th April 2020 03:18 AM | அ+அ அ- |

சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள மருந்துக் கடைகளின் உரிமையாளா்கள், ஊழியா்களுக்கு அடையாள அட்டைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், சுமாா் 100 பேருக்கு அடையாள அட்டைகளை நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா வழங்கினாா். மருந்து ஆய்வாளா் சைலஜா முன்னிலை வகித்தாா். நகராட்சி பொறியாளா் மகாராஜன், மருந்தாளுநா் சங்க மாநிலச் செயலா் ஜோ.வெங்கடசுந்தரம், மொத்த மருந்துப் பிரிவு தலைவா் பிரகாஷ், நகர மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் கலியபெருமாள், செயலா் பலராமன், பொருளாளா் கண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கடலூா் மாவட்ட மருந்து வணிகா்கள் சாா்பில் 1,000-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கும், நகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கும் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.