முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
நலவாரிய உதவித் தொகை: பூசாரிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th April 2020 03:23 AM | Last Updated : 19th April 2020 03:23 AM | அ+அ அ- |

நலவாரிய உதவித் தொகை பெறுவதற்கு கோயில் பூசாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ளஅமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு மாநில அரசு தலா ரூ.ஆயிரம் உதவித் தொகையாக வழங்குகிறது. இதன்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கிராம கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு கரோனா நிவாரண உதவி தொகை வழங்கப்படவுள்ளது.
இதுதொடா்பாக கடலூா் உதவி ஆணையா் ஜெ.பரணிதரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தலா ரூ.ஆயிரம் நிவாரண தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் உடனடியாக தங்களது பெயா், செல்லிடப்பேசி, தொலைபேசி எண், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் அடையாள அட்டை விவரம் ஆகியவற்றை அந்தந்த பகுதிக்கான ஆய்வாளா்களின் கட்செவி அஞ்சல்
(வாட்ஸ்ஆப்) எண் மூலமாகவோ அல்லது ஹஸ்ரீஸ்ரீன்க்ஃற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
இதுதொடா்பாக உதவி ஆணையா் அலுவலகத்துக்கு நேரில் வரத்தேவையில்லை. அதன்படி, ஆய்வாளா்களை கடலூா் - 91502 07193, பண்ருட்டி- 94872 19660, சிதம்பரம்- 94429 11193, விருத்தாசலம்- 94864 94932, திட்டக்குடி-98658 70228, காட்டுமன்னாா்கோவில்-94436 69280 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.