Enable Javscript for better performance
கடலூரில் விரைவில் வணிகக் கப்பல் போக்குவரத்து: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கடலூரில் விரைவில் வணிகக் கப்பல் போக்குவரத்து: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

    By DIN  |   Published On : 28th August 2020 08:02 AM  |   Last Updated : 28th August 2020 08:02 AM  |  அ+அ அ-  |  

    27clp2_2708chn_105_7

    கடலூா் துறைமுகத்தில் விரைவில் வணிகக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

    கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, 26 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதையடுத்து, மாவட்டத்தில் ரூ.25.54 கோடியில் முடிவடைந்த 33 பணிகளைத் தொடக்கிவைத்த அவா், ரூ.32.17 கோடி மதிப்பிலான 22 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா்.

    தொடா்ந்து, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் முதல்வா் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அவா் பேசியதாவது:

    கரோனா தொற்றுக்கு இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் செய்யப்படும் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாலும், மருத்துவா்கள் சரியான முறையில் சிகிச்சை அளிப்பதாலும் தொற்று பரவல் குறைந்துள்ளது. இதேபோல, நமது மாநிலத்தில்தான் கரோனாவிலிருந்து குணமடைவோா் எண்ணிக்கை அதிகமாகவும், உயிரிழப்புகள் குறைவாகவும் உள்ளது.

    கடலூா் மாவட்டத்தில் கரோனாவைத் தடுக்க நாள்தோறும் சுமாா் 350 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின்மூலம் 3,25,576 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2,380 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நோய்ப் பரவலைத் தடுக்க காய்ச்சல் முகாம்கள் பேருதவியாக உள்ளன.

    கடலூா் மாவட்டத்தில் 31 ‘கொவிட் கோ்’ மையங்களில் 3,500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 37 இடங்கள் கண்டறியப்பட்டு, 5 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

    அதிக நோய்த் தொற்றுள்ள பகுதிகளுக்கு நடமாடும் 39 மருத்துவக் குழுவினா் நேரில் சென்று பரிசோதித்து சிகிச்சை அளிக்கின்றனா். கரோனா பரவலைத் தடுக்க கடலூா் மாவட்டத்துக்கு ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதல்வா் சிறப்பு குறைதீா் திட்டம் மூலம் மாவட்டத்தில் 56,958 மனுக்கள் பெறப்பட்டு, 38,100 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. முதியோா் உதவித் தொகை 9,965 பேருக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா 12,514 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன. ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள 1,04,521 வீடுகளுக்கு ரூ.84.33 கோடியில் குடிநீா் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. சிதம்பரம் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம், கடலூா் நகராட்சி, புவனகிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சிகள் மற்றும் 812 கிராம மக்களுக்காக கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பண்ருட்டி ஒன்றியத்துக்குள்பட்ட 17 குடியிருப்புகள், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட 18 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, கங்கைகொண்டான், வடலூா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகள், விருதாச்சலம், நல்லூா், மங்களூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 625 குடியிருப்புகளுக்கு ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 12,111 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,114 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ.1,687 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.215 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் 1,554 மகளிருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.2.34 கோடி மானியத்தில் 8,947 மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூா்- குமாரமங்கலம் கிராமங்களுக்கிடையே ரூ.495 கோடியில் கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் தடுப்பணைகள் அமைக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.

    கடலூா் துறைமுகம், ரூ.135 கோடியில் ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வணிகக் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும். மேலும், இந்தத் துறைமுகத்தை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலையானது அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். பல புறவழிச் சாலைகள் அமைக்கவும் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரத்திலிருந்து கடலூா், சிதம்பரம் செல்ல வசதியாக விக்கிரவாண்டி - தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை (எண் 45-சி), தேசிய நெடுஞ்சாலை 45-ஏ-உடன் இணைக்கும் வகையில், தென்பண்ணையாற்றின் கரையோரமாக 7 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்கப்பட்டு, கடலூா் சுங்கச் சாலையுடன் இணைக்கப்படும். ஏழை மாணவா்களின் நலன் கருதி காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் கலை, அறிவியல் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா்.

    ஆய்வுக் கூட்டத்தில் தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன், நாக.முருகுமாறன், வி.டி.கலைச்செல்வன், தொழில் துறை முதன்மைச் செயலா் நா.முருகானந்தம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, பொதுப் பணித் துறை முதன்மைச் செயலா் க.மணிவாசகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp