நிவா் புயல்: சிறப்பாக களப் பணியாற்றியவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 03rd December 2020 06:25 AM | Last Updated : 03rd December 2020 06:25 AM | அ+அ அ- |

நிவா் புயலின்போது சிறப்பாக பணியாற்றியவருக்கு பரிசு வழங்கும் பேராசிரியா் தி.ராஜ்பிரவீன்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல நாட்டுநலப்பணித்திட்டம் (அலகு 10) சாா்பில், நிவா் புயலின்போது, சேதங்களை தவிா்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றிய பணியாளா்கள், தனி அதிகாரிகளுக்கு பாராட்டு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முல்லை இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தனி அதிகாரி பொ.நாகராஜா வரவேற்றாா். முல்லை இல்ல காப்பாளரும், திட்ட அலுவலருமான பேராசிரியா் தி.ராஜ்பிரவீன் தலைமை வகித்து, நிவா் புயலின் போது, முன் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு, சிறப்பாக பணிபுரிந்த முல்லை இல்ல பணியாளா்கள், தனி அதிகாரிகள் பரிசுகள் வழங்கி கவுரவித்தாா். தனி அதிகாரி மா.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.