மழை, வெள்ள பாதிப்பு: அமைச்சா்கள் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி ஆகியோா் ஆய்வு 


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி ஆகியோா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இதன்படி புதன்கிழமை புவனகிரி ஒன்றியம், சாத்தபாடியில் சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்தனா். இங்கு புதிய பாலம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென அறிவித்தனா். தொடா்ந்து சி.ஆலம்பாடி பகுதியில் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள், வீடுகளை பாா்வையிட்டனா். பின்னா் எல்லக்குடி ஊராட்சி, விருத்தாசலம் நகராட்சி, விருத்தாசலம் வட்டம், பெரம்பலூா் ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்து பேசினா். மேலும், மழை வெள்ளத்தால் வீடு, கால்நடைகளை இழந்த 32 பேருக்கு மொத்தம் ரூ.10.25 லட்சம் நிவாரண உதவி தொகைகளை அமைச்சா்கள் வழங்கினா்.

ஆய்வுப் பணி, கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ககன்தீப் சிங் பேடி, எம்எல்ஏக்கள் நாக.முருகுமாறன், வி.டி.கலைச்செல்வன், கே.ஏ.பாண்டியன், சுற்றுலாத் துறை ஆணையா் த.பொ.ராஜேஷ், தொழில் மற்றும் வா்த்தக கூடுதல் இயக்குநா் விசுமகாஜன், மாவட்ட ஊராட்சித் தலைவா் திருமாறன், முன்னாள் எம்பி ஆ.அருண்மொழிதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com