முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
திட்டக்குடி பேரூராட்சியில் 40 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
By DIN | Published On : 15th December 2020 12:32 AM | Last Updated : 15th December 2020 12:32 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
திட்டக்குடி பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் 101 கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் ஏலம் விடப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சுமாா் 10 ஆண்டுகளாக முறையாக வாடகை செலுத்தப்படவில்லையாம். இந்தக் கடைக்காரா்கள் மொத்தம் ரூ.40 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பேரூராட்சிக்கு புதிதாக பொறுப்பேற்ற செயல் அலுவலா் மத்தியாஸ் வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தாா். எனினும், பெரும்பாலோா் வாடகையைச் செலுத்த முன்வரவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை மாலையில் பேரூராட்சி செயல் அலுவலா் மத்தியாஸ் தலைமையில் இளநிலை உதவியாளா் சதீஷ் மற்றும் ஊழியா்கள் வாடகை பாக்கி வைத்துள்ள காய்கறி உள்பட சுமாா் 40 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.