திராவிட தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th December 2020 03:54 AM | Last Updated : 25th December 2020 03:54 AM | அ+அ அ- |

நெய்வேலி: நெய்வேலியில் என்எல்சி திராவிட தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கியூ பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பொதுச் செயலா் மணிமாறன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், என்எல்சி திராவிட தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு தோ்தலில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். என்.எல்.சி.யில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு வேலை வழங்க வேண்டும். இன்கோசா்வ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளா்களை என்.எல்.சி.யில் பணியமா்த்தக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
சங்கத்தின் சிறப்புத் தலைவா் கோபாலன், தலைவா் இளமுருகன், பொருளாளா் ராமச்சந்திரன், துணைப் பொதுச் செயலா் முத்துகிருஷ்ணன், அமைப்புச் செயலா் மலா்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.