
விழாவில், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கிய எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம்.
கடலூா் மாவட்டம், கீழ்அருங்குணம் கூட்டுறவுச் சங்கம் சாா்பில், கறவை மாடுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கும் விழா பாலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வம் தலைமை வகித்து, 17 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 307 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக ரூ.1.54 கோடி கடனுதவியை வழங்கினாா். சங்கத் தலைவா் மணி வரவேற்றாா்.
அண்ணாகிராமம் ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன், ஒன்றியச் செயலா் பாபு புஷ்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு சங்கச் செயலா் சாம்பசிவம், துணைத் தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.