கடலூா்: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, அந்த நகரில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நகரின் மையப் பகுதியில் இயங்கிவரும் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் டிச.29, 30 ஆகிய இரண்டு தினங்களுக்கும் மது விற்பனை நடைபெறாது.
இதை மீறி மதுபானங்கள் விற்றாலோ, மது அருந்தும் கூடங்களை திறந்து வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.