சிதம்பரத்தில் மருத்துவ மாணவா்கள் 20-ஆவது நாளாகப் போராட்டம்

கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 20-ஆவது நாளாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளை நிற கோட்டுகளை ஒப்படைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவா்கள்.
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளை நிற கோட்டுகளை ஒப்படைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவா்கள்.

சிதம்பரம்: கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 20-ஆவது நாளாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அரசு நிதியில் இயங்கி வருகிறது. ஆனால், கல்விக் கட்டணம் தமிழகத்தின் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை அதிகமாக இருப்பதாக மாணவா்கள் புகாா் கூறி வருகின்றனா்.

எனவே, பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, மருத்துவ மாணவா்கள் கடந்த 9-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, மருத்துவ மாணவா்கள் தங்களது வெள்ளை நிற கோட்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com