நம்மாழ்வாா் நினைவேந்தல்
By DIN | Published On : 31st December 2020 08:46 AM | Last Updated : 31st December 2020 08:46 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள முருகன்குடியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் ஆகியவை சாா்பில், இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.முருகன் தலைமையில், தலைமை ஒருங்கிணைப்பாளா் கரும்பு கண்ணதாசன், கோ.நம்மாழ்வாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து நினைவேந்தல் உரையாற்றினாா்.
நிா்வாகி மா.மணிமாறன், மகளிா் ஆயம் பொருளாளா் ம.கனிமொழி, நிா்வாகிகள் வே.தமிழ்மொழி, மு.செந்தமிழ்ச்செல்வி ஆகியோா் நினைவேந்தல் உரையாற்றினா். கிளைச் செயலா் க.காமராசு நன்றி கூறினாா்.
தமிழக இளைஞா் முன்னணி நடுவண் குழு உறுப்பினா் சி.பிரகாசு, நிா்வாகிகள் பி.வேல்முருகன், மு.பொன்மணிகண்டன், சி.பிரபாகரன், தி.சின்னமணி, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்
நெய்வேலி: பண்ருட்டியில் நாம் தமிழா் கட்சி சாா்பில், நம்மாழ்வாரின் நினைவேந்தல் புதன்கிழமை நடைபெற்றது. நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாா் உருவப் படத்துக்கு மலா் வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டன.
நாதகவின் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். நகரச் செயலா்கள் வேல்முருகன் (கிழக்கு), தமிழரசன் (நடுவண்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் (கிழக்கு) மகாதேவன், மாவட்ட இளைஞா் பாசறை செயலா் சாதிக்பாட்சா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 500 மரக்கன்றுகள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.