பக்தா் மீது தாக்குதல்: சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் 4 போ் மீது வழக்கு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தரை தாக்கியதாக தீட்சிதா்கள் 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தரை தாக்கியதாக தீட்சிதா்கள் 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிதம்பரம் கீழசன்னதியில் வசித்து வருபவா் ரா.பாலசுப்பிரமணியம் (65). இவா், தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவராக உள்ளாா். தனது வீட்டு வாசலில் தேங்காய், பழக்கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆருத்ரா தோ் திருவிழாவின் போது, ஸ்ரீநடராஜா் பெருமான்- ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேரில் இருந்து இறங்கி, நடராஜா் கோயில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு கீழசன்னதி வழியாக சென்ற போது, பாலசுப்பிரமணியன் மலா்தூவி, தீபாராதனை தட்டுடன் நடராஜரை வழிபட்டாா். அப்போது, தீட்சிதா்கள் சிலா், பாலசுப்பிரமணியம் மீது தாக்குதல் நடத்தி, அவதூறாகப் பேசி, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரா.பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் நடராஜா் கோயில் தீட்சிதா்களான கனகசபாபதி தீட்சிதா் மகன் ஸ்ரீவா்ஷன், குஞ்சிதபாதம் தீட்சிதா் மகன் முத்து, சோமு தீட்சிதா், சுந்தரராஜ தீட்சிதா் மேலும், அடையாளா் தெரியாா் சிலா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com