வருகிற சட்டப்பேரவை தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா தேர்தல்: அமைச்சர் சி.வி.சண்முகம்

வரும் சட்டப்பேரவை தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா என்ற தேர்தல். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
வரும் சட்டப்பேரவை தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா என்ற தேர்தல். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
வரும் சட்டப்பேரவை தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா என்ற தேர்தல். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சிதம்பரம்: வரும் சட்டப்பேரவை தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா என்ற தேர்தல். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2021 பணிகள் குறித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வேணுகோபால்பிள்ளைத் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், தமிழக சட்டம், சிறைச்சாலை மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது: 2021-ல் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் வர உள்ளது. தேர்தல் புதிதல்ல. பல்வேறு தேர்தலை சந்தித்துள்ளோம். ஆனால் இந்த தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா தேர்தல். எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம் அதிமுக. 50 ஆண்டுகள் அதிமுக வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம். எனக்கு பிறகும் இந்த இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதற்கு நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். ஜெயலலிதா மறைந்த பிறகும் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளோம். அதிமுக வேட்பாளராக இருந்தாலும், கூட்டணி கட்சியாக இருந்தாலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இந்த அரசு மீது மக்களிடம் நல்ல அபிப்ராயம் உள்ளது. அரசு சிறப்பாக செயல்படுகிறது என அதிகாரிகள் வரை பேச்சு ஏற்பட்டுள்ளது. 2006 திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, ரவுடிசம் உள்ளிட்டவை நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன பாதிப்பு ஏற்படும், என்ன நடக்கும் என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றால், திமுக தானே அழிந்தவிடும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஏ.பாண்டியன் தலைமை வகித்து பேசியது: முதல்வர் என்னை அழைத்து இளைஞர், இளம்பெண்கள் பாசறையை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என கூறினார், அவரது கட்டளையை ஏற்று அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல மழை. கொட்டும் மழையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடலூர் மாவட்டத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு பல்வேறு நிவாரண பணிகளை அறிவித்துளஅளார். 2021ல் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக ஆக்க வேண்டும் என்பது உங்கள் கையில்தான் உள்ளது. அதை தேர்தலில் பணியாற்றி நிறைவேற்ற வேண்டும். கடலூர் மாவட்டத்திற்கு 14 தடுப்பணைகள் கட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதி பெற்று தந்துள்ளார் என கே.ஏ.பாண்டியன் தெரிவித்தார்.

மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார் வரவேற்று பேசினார். சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளருமான நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், கே.கே.கலைமணி, முன்னாள் எம்பிக்கள் பு.தா.இளங்கோவன், ஏ.முருகேசன்,  முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் க.திருமாறன், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் தேன்மொழி, முன்னாள் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், தலைமைக்கழக பேச்சாளர் தில்லை கோபி, தொழில்நுட்பபிரிவு மணிகண்டன், முருகையன், கருப்பு ராஜா, மணிராஜ், நகர அவைத்தலைவர் தில்லைசேகர்  உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.  நகரச் செயலாளர் ரா.செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com