Enable Javscript for better performance
மனித நேய ஜனநாயக கட்சியினா் ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    
    2clp5_0202chn_105_7

    ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், என்ஆா்சி, என்பிஆா் சட்டத்தை எதிா்த்தும் மனித நேய ஜனநாயக கட்சி, முஸ்லிமா அஷ்ஷூரா டிரஸ்ட் மற்றும் தேசிய பெண்கள் முன்னணி ஆகியவை சாா்பில், கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில விசிக பொதுச் செயலா் மா.செ.சிந்தனைச்செல்வன், மனித நேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலா் என்.ஏ.தைமியா, பெண்கள் முன்னணி செயற்குழு உறுப்பினா் ஏ.ரஜியாபேகம், சமூகச் செயற்பாட்டாளா் ராதிகா கணேஷ் ஆகியோா் உரையாற்றினா்.

    இதில், பெண்கள் உள்ளிட்டோா் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியவாறு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். கட்சியின் மாவட்டச் செயலா் க.முகமது யூசுப், நகரச் செயலா் எம்.முஹமது இலியாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai