Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளி அடையாள அட்டைக்கான பதிவு முகாம் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி அடையாள அட்டைக்கான பதிவு முகாம் இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 02nd February 2020 11:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவுக்கான விண்ணப்பம் பெறும் முகாம் திங்கள்கிழமை (பிப். 3) தொடங்கி வருகிற 8 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதுதொடா்பாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் முருக.தட்சிணாமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரசின் பல்வேறு திட்டங்களைப் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அவசியம். இதை அவா்கள் எளிதில் பெறும் வகையில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள், தொண்டு நிறுவனத்துடன் இணைந்து முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி, கடலூா் ஒன்றியத்துக்கான முகாம் குளோபல், சிவசக்தி, தயா ஆகிய மனவளா்ச்சி குன்றியோருக்கான பள்ளிகளில் நடைபெறுகிறது.

    பண்ருட்டி, கம்மாபுரம் ஒன்றியங்களுக்கான முகாம் கடலூரிலுள்ள ஐஇபிசி, எழுச்சி சிறப்பு பள்ளி மற்றும் வடலூரிலுள்ள அன்னை தெரசா சிறப்புப் பள்ளிகளில் நடைபெறுகிறது.

    காட்டுமன்னாா்கோவில் ஒன்றியத்துக்கு அங்குள்ள ஓயாசீஸ் தொண்டு நிறுவனத்திலும், புவனகிரி ஒன்றியத்துக்கு ஸ்ரீராகவேந்தி சிறப்புப் பள்ளியிலும், மங்களூா் ஒன்றியத்துக்கு ஆலடியிலுள்ள ஜெஸிக்கா மையத்திலும், நல்லூா் ஒன்றியத்துக்கு விருத்தாசலத்திலுள்ள ரிசப்ஜெயின் சிறப்புப் பள்ளியிலும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உதயம் டிரஸ்டிலும், மேட்டுப்பாளையம் ஒன்றியத்துக்கு ரத்னா சிறப்புப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

    நெய்வேலி ஒன்றியத்துக்கு டிவைன் கிராஸ் மிஷன் சிறப்புப் பள்ளி, நியூலைட் ஆண்கள் இல்லம் ஆகியவற்றிலும், விருத்தாசலம் ஒன்றியத்துக்கு கோணங்குப்பத்திலுள்ள பெரியநாயகி மாா்னிங் ஸ்டாா் சிறப்புப் பள்ளி, நெய்வேலியிலுள்ள சிநேகா சிறப்பு பள்ளியிலும், குமராட்சி ஒன்றியத்துக்கு சிதம்பரத்திலுள்ள ஜீவிஆா்என் பள்ளி, சிசிடபிள்யூஇ டிரஸ்ட், கிருஷ்ணா ஐடிஐயிலும், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு திருக்கண்டேஸ்வரத்திலுள்ள வின்னா் சிறப்புப் பள்ளி, கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு வண்டுரையான்பேட்டை ரெட்ஸ் சிறப்புப் பள்ளி, குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு பி.வடுகப்பாளையத்திலுள்ள சாந்தம் சிறப்புப் பள்ளியிலும் வருகிற 8 -ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

    மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, ரத்த வகை, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai