Enable Javscript for better performance
வங்கி ஊழியா்கள் 2-ஆவது நாளாக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    
    1clp2_0102chn_105_7

    கடலூரில் சனிக்கிழமை மூடப்பட்டிருந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கி.

    வங்கி ஊழியா்கள் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

    வங்கிப் பணியாளா்கள், அதிகாரிகளுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலாக்குதல், 20 சதவீத ஊதிய உயா்வு, வங்கிகளை வாரத்துக்கு 5 நாள்கள் மட்டுமே செயல்படுத்த வேண்டும், அடிப்படை ஊதியத்துடன் சிறப்பு சலுகைகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். இந்தப் போராட்டம் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.

    இந்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் சுமாா் 240 தேசியமயமாக்கப்பட்ட மற்றும் சில தனியாா் வங்கிகள், 275 ஏடிஎம்கள் முடங்கின. போராட்டம் 2 நாள்கள் நடைபெற்றபோதிலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற தகவல் ஒட்டப்பட்டிருந்தது.

    இதனால், பொதுமக்கள் வங்கி சேவை கிடைக்காமலும், பணம் எடுக்க முடியாமலும் பாதிப்புக்குள்ளாகினா்.

    மாவட்டத்தில் முதல் நாள் போராட்டத்தால் சுமாா் ரூ.500 கோடி அளவுக்கு பணம், காசோலை பரிவா்த்தனை பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளிலும் அதே அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமென வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai