வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 02nd February 2020 11:27 PM | Last Updated : 02nd February 2020 11:27 PM | அ+அ அ- |

வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடியைச் சோ்ந்தவா் மூ.சிவலிங்கம் (37). கடலூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணி செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி ருக்மணி (27) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், ஏற்பட்ட மனவருத்தத்தில் வீட்டுக்குள் சென்ற சிவலிங்கம் தூக்கிட்டுக் கொண்டாராம். உயிருக்குப் போராடிய அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ருக்மணி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.