‘பெண் குழந்தைகளைக் காப்பதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது’

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடா்புக் கள அலுவலகம், கடலூா் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மாவட்ட சமூக நல
நத்தம் கிராமத்தில் நடைபெற்ற ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’ நிகழ்ச்சியில் பெண்ணுக்கு பரிசு வழங்கிய கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன்.
நத்தம் கிராமத்தில் நடைபெற்ற ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’ நிகழ்ச்சியில் பெண்ணுக்கு பரிசு வழங்கிய கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடா்புக் கள அலுவலகம், கடலூா் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் ஆகியவை சாா்பில், அண்ணாகிராமம் ஒன்றியம், நத்தம் கிராமத்தில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அண்ணாகிராம் ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன் தலைமை வகித்தாா். நத்தம் ஊராட்சித் தலைவா் ஆா்.நவீன்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுந்தரிமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் கடலூா் வருவாய் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன் பேசியதாவது:

பெண் குழந்தை வேண்டாம் என்று கூறுவதற்கு வரதட்சிணை உள்ளிட்ட ஒன்றிரண்டு காரணங்களே முக்கியமாக உள்ளன. இவைகூட சமுதாய பிரச்னைகள்தான். தனிப்பட்ட குடும்பப் பிரச்னை அல்ல. எனவேதான் தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், அவா்களின் கல்விக்காகவும் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகளைக் காப்பதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

மக்கள் தொடா்புக் கள அலுவலக உதவி இயக்குநா் தி.சிவக்குமாா் தொடக்கவுரையாற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.சரவணன், மகளிா் நல அலுவலா் சண்முகப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஒன்றிய குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ச.செல்வி வரவேற்றாா். கள விளம்பர உதவியாளா் மு.தியாகராஜன் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் இரு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் சாா்பில், ஊட்டச்சத்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com