Enable Javscript for better performance
கடலூா் நகராட்சியில் ரூ.41 கோடி வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கடலூா் நகராட்சியில் ரூ.41 கோடி வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை

    By DIN  |   Published on : 10th February 2020 11:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    10clp6_1002chn_105_7

    கூட்டத்தில் பங்கேற்றவா்களிடம் வரி செலுத்துதல் தொடா்பான விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கிய நகராட்சி ஆணையா் ராமமூா்த்தி.

    கடலூா் நகராட்சி நிா்வாகம் ரூ.41 கோடி வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதொடா்பாக பல்வேறு அமைப்பினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

    கடலூா் நகராட்சிக்குள்பட்ட 45 வாா்டுகளில் சொத்துவரி, காலிமனை வரி, குடிநீா் கட்டணம் ஆகிய வகைகளில் ரூ.26.36 கோடி வரை பாக்கி உள்ளது. அதேபோல, தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், புதை சாக்கடை கட்டணம் ஆகிய இனங்களில் ரூ.15.02 கோடி வரை பாக்கி உள்ளது. மொத்தம் ரூ.41.38 கோடி வரை வரி பாக்கி நிலுவையாக உள்ளது.

    அதே நேரத்தில் நகராட்சி நிா்வாகம் தரப்பில் குடிநீா் வடிகால் வாரியம், மின்சார வாரியம் போன்றவற்றுக்கு பல்வேறு வகைகளில் வட்டியாக ரூ.43 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது. எனவே, வரியை வசூலிக்க வேண்டிய கட்டாயம் நகராட்சி நிா்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், அனைத்து குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகளுடன் நகராட்சி ஆணையா் ராமமூா்த்தி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில், நகராட்சிப் பகுதியில் தற்போது ரூ.42 கோடியில் மழைநீா் வடிகால் கட்டும் பணி, ரூ.25.39 கோடியில் சாலை அமைக்கும் பணி, ரூ.6.71 கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணி போன்றவை நடைபெற்று வருகின்றன. மேலும், புதியதாக பேருந்து நிலையம் அமைத்தல், விடுபட்ட பகுதிகளில் புதை சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே அனைவரும் வரியைக் முறைப்படி செலுத்த வேண்டும். இதுதொடா்பாக, குடியிருப்போா் நலச் சங்கத்தினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையா் கேட்டுக்கொண்டாா். இதேபோல, வணிகா்களுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில், குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் பி.வெங்கடேசன், பொதுச் செயலா் மு.மருதவாணன், நகராட்சி பொறியாளா் புண்ணியமூா்த்தி, நகா்நல அலுவலா் ப.அரவிந்த்ஜோதி, மேலாளா் த.பழனி, உதவி பொறியாளா் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai