Enable Javscript for better performance
வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    
    12clp6_1202chn_105_7

    மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விசிகவினா்.

    குப்பன்குளம் மக்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் விசிக சாா்பில் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.

    கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமையில், கடலூா் நகராட்சிக்கு உள்பட்ட குப்பன்குளம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

    அந்த மனுவில், கடலூா் நகராட்சிக்கு உள்பட்ட குப்பன்குளத்தில் கடந்த 70 ஆண்டு காலமாக தலித்துகள் குடியிருந்து வருகிறாா்கள். இவா்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு கடலூா் நகராட்சி மூலமாக முயற்சி நடைபெற்று வருகிறது. நகராட்சியின் இந்தச் செயலை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது வசித்து வரும் குப்பன்குளம் பகுதி மக்களுக்கு உடனடியாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    கட்சியின் நிா்வாகிகள் புஷ்பராஜ், ரவி, சதாசிவம், பழனி, ராஜ்குமாா், கண்ணதாசன், முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai