கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 13th February 2020 11:46 PM | Last Updated : 13th February 2020 11:46 PM | அ+அ அ- |

கடலூா் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கிய மருத்துவா் என்.ஹபீசா.
நேரு இளையோா் மையத்துடன் இணைக்கப்பட்ட கடலூா் வெளிச்செம்மண்டலத்திலுள்ள ஜெயதேவி இளையோா் நலச் சங்கம் சாா்பில், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலா் என்.ஹபீசா தலைமை வகித்து, கரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கான அறிகுறி, பரவும் விதம், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறை குறித்து விளக்கினாா். பின்னா், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மூலமாக அச்சிடப்பட்ட கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்.
மருத்துவ அலுவலா் பிரேமா, சமூக நல தன்னாா்வலா் இரா.சண்முகம் ஆகியோா் பேசினா். மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். மன்ற ஆலோசகா் டி.காயத்ரிதேவி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருக்க, தேசிய இளைஞா் நலத் தொண்டா் ஜி.கே.திபங்கா் நன்றி கூறினாா்.