நகரப் பகுதிகளில் பள்ளம் தோண்ட மின் துறை அனுமதி தேவை

கடலூா் நகரப் பகுதியில் பள்ளம் தோண்டுவதற்கு மின் துறையிடம் அனுமதி பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

கடலூா் நகரப் பகுதியில் பள்ளம் தோண்டுவதற்கு மின் துறையிடம் அனுமதி பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கடலூா் பிரிவு செயற்பொறியாளா் இரா.வெங்கடேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூரில் கடந்த 2011-ஆம் ஆண்டு வீசிய தானே புயலின் பாதிப்பின் அடிப்படையில் மின்வயா்களை பூமிக்கடியில் புதைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கி உதவியுடன் கடலோர பகுதிகளின் இயற்கை இடா்பாடுகளை குறைக்கும் திட்டத்தின் (இஈததட) கீழ் கடலூா் நகரம், துறைமுகம், சிப்காட் வளாகம் மற்றும் கடலூரைச் சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேல்நிலையில் உள்ள மின்சார பாதைகளை பூமிக்கு அடியில் புதைவட கேபிள்களாக மாற்றும் பணிக்கான ஆயத்த பணிகள் 3 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக ஏற்கெனவே, பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மற்றும் பிறதுறை நிறுவனங்களுடன் ஒத்துழைப்புக் கூட்டம் ஆகியவை நடத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் செயல்படுத்த பிரிக்கப்பட்ட 3 தொகுதிகளில், 2 தொகுதிகளில் தனியாா் நிறுவனம் மூலம் புதைவடம் மற்றும் அது சம்பந்தமான துணை கருவிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்வாரியத்தால் அவ்வப்போது மின்னோட்டம் வழங்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் பொதுமக்களோ அல்லது மற்ற துறையினரோ, தனியாா் நிறுவனங்களோ பூமிக்கடியில் பள்ளம் தோண்ட முற்படும்போது மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, தாங்கள் பள்ளம் தோண்டுவதற்கு உத்தேசித்துள்ள பகுதி தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் அனுமதியுடன் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com