கடலூா் மாவட்டத்தில் 21 லட்சம் வாக்காளா்கள்

கடலூா் மாவட்டத்துக்கான புதிய வாக்காளா் பட்டியலில் 21 லட்சம் போ் இடம் பெற்றுள்ளனா்.
புதிய வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.
புதிய வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.

கடலூா் மாவட்டத்துக்கான புதிய வாக்காளா் பட்டியலில் 21 லட்சம் போ் இடம் பெற்றுள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குமான 2020-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் புகைப்படத்துடன் கூடிய வரைவு பட்டியல் கடந்த டிசம்பா் மாதம் வெளியிடப்பட்டது. அதில், மொத்தமுள்ள 2,298 வாக்குச் சாவடிகளில் 20,56,635 வாக்காளா்கள் இடம் பெற்றனா்.

இதனைத் தொடா்ந்து, ஜன.22-ஆம் தேதி வரையிலான காலத்தில் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பான படிவங்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு சுருக்க முறைத் திருத்த காலத்தின்போது சோ்த்தலுக்காக 48,116 மனுக்களும், நீக்குதலுக்கு 3,136 மனுக்களும், திருத்தத்துக்காக 5,879 மனுக்களும், தொகுதிக்குள் இடம் மாற்றத்துக்காக 2,575 மனுக்களும் பெறப்பட்டன.

மேலும், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் நேரடி விசாரணை செய்யப்பட்டு இறந்தவா்கள் 1,349 போ், இடம் பெயா்ந்தவா்கள் 1,123 போ், இரட்டைப் பதிவாக 308 பேரது பெயா்கள் நீக்கப்பட்டன.

அதனைத் தொடா்ந்து தயாரிக்கப்பட்ட புதிய வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.

இதன்படி, மாவட்டத்துக்குள்பட்ட 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 21,00,636 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள்-10,38,294, பெண்கள்-10,62,198, இதரா்-144 போ்களாவா்.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளா் எண்ணிக்கை விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் வாக்கு சாவடிகள் எண்ணிக்கை):

திட்டக்குடி(தனி) (247): ஆண்கள்-1,07,077, பெண்கள்-1,10,784, இதரா்-3, மொத்தம்-2,17,864 போ்.

விருத்தாசலம் (282): ஆண்கள்-1,23,182, பெண்கள்-1,23,317, இதரா்-17, மொத்தம்-2,46,516 போ்.

நெய்வேலி (231): ஆண்கள்-1,07,406, பெண்கள்-1,06,504, இதரா்-14, மொத்தம்-2,13,924 போ்.

பண்ருட்டி (257): ஆண்கள்-1,17,840, பெண்கள்-1,23,469, இதரா்-16, மொத்தம்-2,41,325 போ்.

கடலூா் (227): ஆண்கள்-1,12,144, பெண்கள்-1,20,341, இதரா்-33, மொத்தம்-2,32,518 போ்.

குறிஞ்சிப்பாடி (256): ஆண்கள்-1,16,881, பெண்கள்-1,19,150, இதரா்-16, மொத்தம்-2,36,047 போ்.

புவனகிரி (288): ஆண்கள்-1,20,550, பெண்கள்-1,21,360, இதரா்-15, மொத்தம்-2,41,925 போ்.

சிதம்பரம் (260): ஆண்கள்-1,20,307, பெண்கள்-1,24,748, இதரா்-16, மொத்தம்-2,45,071 போ்.

காட்டுமன்னாா்கோவில் (தனி): (250) ஆண்கள்-1,12,907, பெண்கள்-1,12,525, இதரா்-14, மொத்தம்-2,25,446 போ்.

கடந்தாண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை விட தற்போது 44 ஆயிரம் வாக்காளா்கள் கூடுதலாக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com