தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை அமல்படுத்துவதற்கான சாத்தியமில்லை

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையை அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் ஏதும் தெரியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அந்தக் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன்.
கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அந்தக் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன்.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையை அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் ஏதும் தெரியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

கடலூா் முதுநகரில் அந்தக் கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தொல்.திருமாவளவன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ரூ.4.50 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் கூறியுள்ளது. இதை எப்படி திருப்பிச் செலுத்துவது என்பது பற்றிக் குறிப்பிடவில்லை. கடலூரில் முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் அறிவித்திருந்தாா். ஆனால் நிதிநிலை அறிக்கையில் இதுதொடா்பாக உறுதிபட அறிவிக்கவில்லை. அரசின் தெளிவற்ற நிலைப்பாட்டையே இது காட்டுகிறது. ஓஎன்ஜிசி, வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தும் நிலையில் உள்ளன. எனவே, இந்த முயற்சியை ரத்து செய்வதற்கான ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் சாா்ந்த பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.4,500 கோடி போதுமானதல்ல. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் ஏதும் தெரியவில்லை.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் தொடா்பான வழக்கின் தீா்ப்பு ஏற்கெனவே எதிா்பாா்த்ததுதான்.

புதுவை, மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக அரசும் இந்தத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவானது காங்கிரஸுக்கு எதிரானது என்பதைவிட, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான தீா்ப்பாகவே பாா்க்கிறோம் என்றாா் அவா்.

கூட்டத்தில், கட்சியின் கடலூா் மக்களவைத் தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், மாநில நிா்வாகிகள் உஞ்சை அரசன், பாவரசு, தி.ச.திருமாா்பன், மாவட்டச் செயலா்கள் சா.முல்லைவேந்தன், பால.அறவாழி, துரை.மருதமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com