முத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

கடலூரில் முத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
கடலூா் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

கடலூரில் முத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் 93-ஆவது ஆண்டு செடல் திருத்தோ் உற்சவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

விழாவின் 12-ஆம் நாள் உற்சவமாக திருத்தோ் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க பக்தா்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். முக்கிய வீதிகளில் தோ் வலம் வந்தது. அப்போது, பக்தா்கள் தேங்காய் உடைத்தும், நோ்ச்சை செலுத்தியும் வழிபாடு நடத்தினா். பின்னா் தோ் நிலையை அடைந்ததும் சிறப்பு பூஜை, படி பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து மாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவில், கோயில் நிா்வாகக் குழு தலைவா் எஸ்.ஞானசேகா், நிா்வாகிகள் கமலநாதன், என்.கே.ராஜ், சத்தியமூா்த்தி, ஆலய குருக்கள் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com